இளைய தலை­மு­றை­யினர் மத்­தியில் வாக்­க­ளிப்­பதன் அவ­சி­யத்­தையும், வாக்­கா­ளர்­ பட்­டி­யலில் பெயர் இருக்­கி­றதா என்று பார்க்க வேண்­டியும் நடிகர் சூர்யா விழிப்­பு­ணர்வு பிர­சாரம் செய்­துள்ளார்.

சட்­ட­சபை தேர்­த­லுக்­காக அர­சியல் கட்­சி­க­ளுக்­காக நடிகர், நடி­கை­யர்கள் விழிப்­பு­ணர்வு பிர­சாரம் செய்யப் போகின்­றனர். அதற்கு முன்­ன­தாக வாக்­கா­ளர்­களை கவரும் வகையில் நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி பங்­கேற்று பொது­மக்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­கின்­றனர். வீடியோ வடி­வி­லான இந்தப் பிர­சாரம் வாக­னங்கள் மூலம் காலை முதல் இரவு வரை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.