மதவாச்சியிலிருந்து, தலை மன்னார் வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்று மாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

மதவாச்சியிலிருந்து தலை மன்னாருக்கான ரயில் மார்க்கத்தில் காணப்படும் மூன்று பாலங்களின் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி குறித்த ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

இந் நிலையில‍ேயே இந்த மார்க்கத்தினூடான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் மார்க்கம் மூடப்பட்டிருந்த காலத்தில் மதவாச்சியிலிருந்து தலை மன்னார் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பஸ்களின் விசேட சேவைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.