(ஆர்.விதுஷா)

நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் கடந்த 15 மணித் தியாலங்களுக்குள்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயினுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சுற்றிவளைப்புக்கள் அம்பிலிப்பிட்டிய ,பொரளை ,கல்கிசை மற்றும் வெலிகடை ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன்  பெண் ஒருவர் உள்ளடங்கலாக ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள்  21 வயதிற்கும் 53 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் ,அவர்களிடமிருந்து மொத்தமாக  130 கிராம் 780 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வரையில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.