பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்காவிட்டால் தனது அமைச்சு பதவியை தூக்கியெறிந்து விடுவேன் என அமைச்சர்ஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன்னர் தெரிவித்தார்.கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தோட்டக் கம்பனிகள் தொடர்ந்து தொழிலாளர்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றன. தொடர்ந்து தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது என்று கூறமுடியாது. அவ்வாறு தோட்டங்களை பராமரிக்க முடியாவிட்டால் உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட உள்ளேன். இந்த பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு பெற்றுத் தராவிட்டால் அமைச்சுபதவியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வந்து விடுவேன்.

மேலும் தீபாவளிக்கு பின்னர் , மக்களோடு வீதியில் இறங்கி சாதாரண மனிதனாக போராடுவேன் என்றார்.