ஜப்பான் இளவரசியான அயாகோ. ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினரான டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ, நிப்பான் யூசென் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் கேய் மோரியா என்பவரை காதலித்தார்.

ஜப்பான் அரச குடும்பத்தின் விதிமுறைகளின்படி, சாமானியக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்ள இளவரசிகள் விரும்பினால் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியாக வேண்டும்.

இந்நிலையில், தன் காதலில் உறுதியாக நின்ற அயாகோ, விதிமுறையைப் பின்பற்றி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி, தன் காதலரை கரம்பிடித்தார்.

மேலும், டோக்கியோவில் உள்ள மெய்ஜி புனிதத்தலத்தில் திங்கள் கிழமை நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.