'பாகுபலி' படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் புதியதாக ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயாதான் 'பாகுபலி 2' படத்தில் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தின் வில்லன் பல்வாள்தேவனான ராணாவுக்கு மனைவியாக நடிக்கவுள்ளாராம். முதல்பாகத்தில் பல்வாள்தேவன் மனைவி குறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் இரண்டாவது பாகத்தில் 'பிளாஷ்பாக்கில்' ஸ்ரேயாவின் கெரக்டர் வருகிறதாம்.

ஏற்கனவே இந்த படத்தில் அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் இருக்கும் நிலையில் தற்போது ஸ்ரேயாவும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.