பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதித்த விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண்ணை விடுதலை செய்து அந் நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பாகிஸ்தானில் வசித்து வரும் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண் இஸ்லாம் மதத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கெதிராக கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து ஆசியா பீபி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு கடந்த 2010ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

இத் தீர்ப்பை லாகூர் உச்ச நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து பீபியின் சார்பில் அந் நாட்டு உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு மனு விசாரணைகள் தொடர்ந்த நிலையில் தலைமை நீதிபதி சகிப் நிஸார் தலைமையிலான நேற்றைய அமர்வின் போது ஆசியா பீபியை விடுதலை செய்து நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.

இத் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.’

மேலும் நீதிமன்றின் தீர்ப்பில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இவ்விடயம் தொடர்பாக அந் நாட்டு பொலிஸ்

தலைநகர் இஸ்லாமாபாத் பகுதியிலிருந்து ராவல்பிண்டிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைப் போராட்டக்காரர்கள் முடக்கினர். மேலுமு; பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன.

லாகூர், கராச்சி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இத் தீர்ப்பிற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் படி பல்வேறு பள்ளிவாசல்களும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பஞ்சாப் மாகாணத்தில் மக்கள் திரளாகக் கூடுவதற்கு நவம்பர் 10ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தனர்.

இந் நிலையில் இத் தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் வரவேற்பு அளித்துள்ளனர்.

ஆசிய பீபியின் வழக்கறிஞர்,

“இந்த நாள் என் வாழ்நாளின் மிக மகிழ்ச்சிகரமான நாள்” என்று தெரிவித்தார்.

இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு அந்நாட்டுச் சட்டத்தின் படி மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம் ஏற்கனவே இச் சட்டத்தின் கீழ் பத்திற்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டிருந்த போதிலும் பயங்கரவாதிகள் எந் நேரத்திலும் அவர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.