நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக தற்போது தற்காலிக அரசாங்கத்தையே நியமித்திருக்கின்றோம் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெகு விரைவில் மக்கள் ஆணையுடன் கூடிய அரசாங்கத்தை பொதுத் தேர்தலூடாக அமைப்பதே எமது நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.

அதற்­கா­கவே நாங்கள் தற்­போது விரை­வாக பொதுத்­தேர்தல் ஒன்றை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்றோம். அவ்­வாறு பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்ற  மக்கள் ஆணை­யுடன் கூடிய  அர­சாங்­கத்தில் நான் முக்­கிய பொறுப்பை எடுத்து மக்­க­ளுக்கு சேவை­யாற்­றுவேன்.

எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த தற்­கா­லிக அர­சாங்­கத்தின் ஊடாக வடக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். நான் முன்னர் முன்­வைத்த காணி­வி­டு­விப்பு வரை­புக்கு  அமைய  இரா­ணு­வத்­திற்கு அவ­சி­ய­மான காணி­களை மட்டும் வைத்­துக்­கொண்டு ஏனை­ய­வற்றை  விடுக்­கு­மாறு   அர­சாங்­கத்தை  வலி­யு­றுத்­துவேன் என்றும் அவர் இதன்போது குறிப்­பிட்டார்.    

புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளமை மற்றும் புதிய பிர­தமர்   நிய­மனம் பெற்­றுள்­ளமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே    அவர் இதனைக் குறிப்­பிட்டார்.