தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தின் உடுமலையில் தலித் இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக, இளம்பெண் ஒருவரையும், அவரைத் திருமணம் செய்த இளைஞரையும் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மிகக் கொடூரமாக, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது ஒரு சாதிவெறிக் குழு. இதில் சங்கர் என்ற இளைஞர் அந்த இடத்திலேயே இறந்து விட, அவரைத் திருமணம் செய்த கௌசல்யா என்ற பெண் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தப் பரிதாப சம்பவம் அப்படியே இணையத் தளங்களில் வெளியாகி இந்திய மக்களை மட்டுமின்றி அதைப் பார்த்த உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை அருகேயுள்ள கொமரலிங்கம், சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன்தான் சங்கர். டிப்ளோமா படித்து முடித்த சங்கர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லு}ரியில் பொறியியல் கல்வியில் சேர்ந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த பழனியைச் சேர்ந்த கௌசல்யாவுக்கும், சங்கருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கௌசல்யாவின் வீட்டாருக்கு இது தெரியவந்தது.
சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கௌசல்யாவின் பெற்றோர் இதனை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அத்தோடு அவரது உறவினர் வழியில் ஒருவருக்கு கௌசல்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதனால், அதிர்ந்துபோன சங்கர் - கௌசல்யா ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டது. அப்போது சங்கர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். கௌசல்யா 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த கௌசல்;யாவின் பெற்றோர், தனது மகளை சங்கர் கடத்திச் சென்று விட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்தனர். அப்போது 'என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விரும்பித்தான் இவரோடு வந்தேன்' என கௌசல்யா கூறினார்.. அவர் மேஜர் என்பதால் சங்கருடனே அனுப்பி வைக்கப்பட்டார். 'கௌசல்யா இல்லாவிட்டால் நான் உயிர் வாழவே மாட்டேன்' என சங்கர் சொல்ல, சங்கரின் தந்தை இருவரையும் ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சில நாட்களில் நிலைமை சீராகும், நிம்மதியாக வாழலாம் என நினைத்திருந்த சங்கர் - கௌசல்யா ஜோடிக்கு அடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன.
திருமணமான சில தினங்களில் அதாவது ஜூலை 24ஆம் திகதி சங்கரின் வீட்டுக்கு வந்தார் கௌசல்யாவின் தாத்தா. எல்லோருடனும் மிக அன்பாக பேசினார். ஸ்கூட்டி பைக் ஒன்றை கொண்டுவந்து கௌசல்யாவுக்கு கொடுத்தார். 'எல்லாம் சரியாகிடும். பாத்துக்கலாம். நீ ஒண்ணும் பயப்படாதே' என ஆறுதல் கூறினார். சிறிது நேரத்தில் "என்னை இந்த வைத்தியசாலைவரைக்கும் கொண்டுபோய் விட்டுட்டு வந்துடுறியாமா" என தாத்தா கௌசல்யாவிடம் கேட்க, மகிழ்ச்சியுடன் பைக்கில் சென்றார் கௌசல்யா. ஆனால் வைத்தியசாலை அருகே தயாராக இருந்த காரினுள் தள்ளப்பட்டு, அப்படியே கடத்தி செல்லப்பட்டார் கௌசல்யா. திரைப்படங்களில் நாயகனையும், நாயகியையும் அவர்களது பெற்றோர், மற்றும் அடியாட்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசி கடத்தி செல்லும் சம்பவத்தை போன்றே அரங்கேறியது இந்த சம்பவம்.
கௌசல்யாவை காணவில்லை என சங்கர் மடத்துக்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு பொலிஸில் கௌசல்யா ஆஜர் ;படுத்தப்பட்டார.; அந்த ஒரு வாரகாலத்தில்; கெஞ்சியும், மிரட்டியும்கூட துளியும் கௌசல்யா அசையவில்லை. பொலிஸ் நிலையத்தில் சங்கரை பார்த்தவுடன், வேகமாய் வந்து கட்டியணைத்துக்கொண்டார் கௌசல்யா.
ஆனால், அத்தோடு கௌசல்யாவின் குடும்பத்தினர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் வௌ;வேறு வழிகளில் கௌசல்யாவை மிரட்டிக்கொண்டே வந்தனர். அவ்வப்போது சங்கரும் இதில் சிக்காமல் இல்லை. அவரும் மிக இழிவான பேச்சுகளை கௌசல்யாவின் பெற்றோர்களிடமிருந்து கேட்க நேர்ந்தது.
அத்துடன், கௌசல்யாவிடம் "அவனுக்கு படிச்சா வேலைகூட கிடைக்காது. நீ கடைசி வரைக்கும் இப்படியேத்தான் இருக்கணும்' என பெற்றோர் எதிர்காலத்தை காட்டி அச்சுறுத்தினர். அதனை கௌசல்யா பெரிதுபடுத்தவில்லை. நாட்கள் சென்றுகொண்டே இருந்தன. அவ்வப்போது மிரட்டலையும், இழிச்சொற்களையும் கேட்டுக்கொண்டே "சங்கர் கல்லு}ரி படிப்பை முடிப்பார். நல்ல வேலை கிடைக்கும். அப்போது வாழ்க்கையை இனிதாக ஆரம்பிக்கலாம்" என காத்திருந்தார் கௌசல்யா.
எதிர்பார்த்த நேரம் வந்தது. கடந்த வாரத்தில் சங்கர் கல்லு}ரி படிப்பை நிறைவு செய்தார.; அத்தோடு தொழில் நேர்காணலில் சித்தியடைந்த அவர் தொழிலையும் பெற்றார். சென்னை சென்றுவந்து அவர் வேலையை உறுதி செய்தார். ஏப்ரல் மாதத்தில் கௌசல்யாவின் பிறந்த நாள். இந்த மகிழ்வோடு, கௌசல்யாவுக்கு புத்தாடை வாங்கிக்கொடுக்க நினைத்தார் சங்கர். எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருந்த நேரம், கௌசல்யாவுக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு எல்லாவற்றையும் மாற்றியது.
தொலைபேசியில் பேசியது கௌசல்யாவின் குடும்பத்தினர். எப்போதும்போல் "எங்களோடு வந்து விடு" என்ற அழைப்புதான் அங்கு பிரதானமாய் இருந்தது. அப்போது, 'அவனுக்கு வேலை கிடைக்காது. அவனை நம்பிப்போய் என்ன பண்ணப்போகிறாய்?" எனக் கேட்டது கௌசல்யாவுக்கு நினைவுக்கு வந்தது. எனவே, 'அவருக்கு வேலை கிடைச்சிருச்சு. சீக்கிரம் சென்னை போகப்போறோம். இப்போ என் பர்த்டேவுக்கு டிரெஸ் வாங்கித்தர்றேன்னு சொன்னார். இப்போ டிரஸ் எடுக்கதான் கிளம்பிட்டு இருக்கோம்' என்று உற்சாகமாய் கூறியுள்ளார்.
அங்குதான் வந்தது பிரச்சினை. இவர்கள் எப்படி நன்றாக இருக்கலாம் என நினைத்தார்களோ அல்லது சென்னை சென்று விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. சங்கரும், கௌசல்யாவும் உடுமலை பஸ் நிலையம் அருகேயுள்ள புடைவைக்கடையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது பிற்பகல் 2 மணிதான் ஆகியிருந்தது. அவர்களைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று கொலைக்காரர்கள் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். ஓடஓட இவர்களை கொடூரமாக வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்தனர். சங்கர் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கௌசல்யா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நு}ற்றுக்கணக்கானோர் நடமாடிய கடைத்தெருவில் அனைவரும் பார்த்திருக்க மோட்டார் சைக்கிளில் வந்த கொலைக்காரர்கள் இருவரையும் வெட்டித்தள்ளிவிட்டு சர்வசாதாரணமாக அங்கிருந்து சென்றனர்.
இந்தச் சம்பவம் அனைத்தும் அருகிலிருந்த கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.ச.Pடி.வி. கமராவில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகள் அனைத்தும் உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டன.
ஒரு காதல்தான் இத்தனை அட்டூழியங்களுக்கும் காரணமா என்றால் நிச்சயமாக அதுவல்ல. சாதி வெறியாட்டம்தான் காரணம். சங்கர் என்ற தலித் இளைஞன், கௌசல்யா எனும் மேல்சாதி என சொல்லப்படும் மற்றொரு சாதி இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைத்தான் இக்கொலை காட்டுகிறது. ஊர் பெரியவர்கள் மூலம், பொலிஸ்மூலம் எப்படியாவது கௌசல்யாவை பிரித்துவிடத் திட்டமிட்டனர். ஆனால், "நாங்கள் இணைந்து வாழ விரும்புகிறோம்" என உறுதிபடக் கூறி மறுத்து விட்டனர் சங்கரும் - கௌசல்யாவும்.
"இவர்கள் நன்றாக இருக்க கூடாது" என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். சாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சாதியமைப்பை தகர்ப்பதில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதுதான் இவர்களுக்கான பிரச்சினை. இதுதான் சாதி வெறியை அதிகரிக்கச் செய்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக இருக்கின்றன.
காதலித்து கரம்கோர்த்த இவர்கள், கண்ணியமாக வாழ வேண்டியதை தடுப்பது ஏன் என்று கேட்டால் இது நாடக காதல் என்கிறார்கள். தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி, திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவதாகவும் சொல்கிறர்கள். அப்படியென்றால் வேலை கிடைத்து வாழ்வை இனிமையாக துவங்க வேண்டிய இவர்களை கொன்றது ஏன்? அப்படியே இளைஞர்தான் ஏமாற்றினார் என்றால், அந்த பெண்ணையும் வெட்டி வீழ்த்த உங்களை தள்ளியது எது?
திருமணமான 8 மாதங்களில் தன் காதல் கணவரை இழந்து நிற்கிறார் கௌசல்யா. இப்போதுகூட, 'இத்தனைக்கும் காரணம் என் பெற்றோரும், மாமாக்களும்தான். நான் நன்றாக வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை" என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
"இந்த கல்யாணத்துல எங்க அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம்கூட இஷ்டமில்லை. முதல்ல என்னை கடத்திவிட்டதாக சங்கர் மேல் புகார் கொடுத்தாங்க. ஆனா, நான் மேஜருங்கறதாலயும், நான் அவரோடதான் போவேன்னு சொன்னதாலேயும் என்னை பிரிக்க முடியலை. தொடர்ந்து என் கணவரை பத்தி தப்பா சொல்லியும், சாதி பெருமை பேசியும் என்னை கூப்பிட்டாங்க. நான் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கலை. கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டேன். கெஞ்சியும், மிரட்டியும் பாத்து நான் ஒத்துக்காததால எங்களை கொல்ல முடிவு பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு நான் முக்கியமில்லை. சாதியும், வறட்டு கௌரமும்தான். இரண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்களை துரத்துனாங்க. அப்போ தப்பிச்சிட்டோம். கல்யாணம் ஆகி 8 மாசமாகிட்டதால இனி எந்த பிரசசி;னையும் இருக்காது. நல்லா வாழலாம்னு நினைச்சோம். இப்படி பண்ணிட்டாங்க. இதுக்கு என் அப்பா, அம்மா, மாமாக்கள்தான் காரணமா இருப்பாங்க" என தனது உடல் பிரச்சினைகளை மறந்து ஆவேசமாக முறையிடுகிறார் கௌசல்யா.
இந்த சமூகம் சாதி வெறிப்பிடித்த சமூகமாக மாறிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தும் கடமை அரசுக்கும், வாக்கு கேட்கத் தயாராகும் அரசியல் அமைப்புகளுக்கும் உள்ளது. இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காதிருக்கும் வகையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டு;ம்.
இதேவேளை, சங்கரின் உடலை பொறுப்பேற்க அவரது பெற்றோரு; உறவினர்களும் மறுப்புத் தெரிவித்ததுடன், அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலைக்குக் காரணமானவர்களை உடன் கைது செய்யவேண்டுமென வலியுறுத்தினர். பின்னர் பொலிஸ் உயரதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியையடுத்து உடல் அவரது சொந்த ஊரான கொமரலிங்கத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.
கடுங்காயங்களுக்கள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கௌசல்யா கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காட்டுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தள்ளார்.
இதனிடையே சங்கரின் கொலைக்கு முலகாரணமான கௌசல்யாவின் தந்தை பொலிஸில் ஆஜராகியுள்ளார். தலைமறைவாகியுள்ள கௌசல்யாவின் தாயையும், தாய் மாமனையும் பொலிஸார் தேடிவருகின்றனர். அத்துடன் கொலையாளிகளான ஐந்துபேரையும் பொலிஸார் கைது செய்தள்ளதுடன், அவர்களை உடுமலைப்பேட்டை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை 15 நாட்கள் தடுத்துவைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தள்ளார்
தருமபுரியில் இளவரசன் என்ற தலித் இளைஞன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டமைக்காக கொல்லப்பட்டார். அடுத்ததாக ஓமலு}ரில் கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞனின் தலையை துண்டித்து ரயில் தண்டவாளத்தில் போட்டார்கள். அந்த ரத்தம் காயும் முன்பே இப்போது உடுமலைப் பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞரை நடுவீதியில் பலரின் முன்னால் துடிக்கத் துடிக்க கத்தியால் கழுத்தில் குத்தி, அரிவாளால் கையை வெட்டி மண்ணில் சாய்த்திருக்கின்றனர்.
இந்த மூன்று கொலைகளுமே ஜாதிவெறியர்களால் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்று 81 ஜாதிக் கொலைகள் நடந்திருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
கடந்த ஞாயிறன்று உடுமலைப்பேட்டையில் நடந்த இந்த கொலை சம்பவக் காட்சி இணையத்தளங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியானதால் தமிழகத்தில் நிலவும் சாதி வெறியின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் விமலாதேவி என்ற பெண்ணை எரித்துக்கொன்றது இதுபோன்ற சாதி வெறியர்கள்தான். தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் திலீப்குமாரை காதலித்த குற்றத்திற்காக அவரது குடும்பத்தினராலேயே விமலாதேவி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். இதேபோன்று 2014ஆம்; ஆண்டு ராமநாதபுரத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட வைதேகி என்ற கர்ப்பிணிப் பெண் அவரது குடும்பத்தினராலேயே விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்று புதைக்கப்பட்டார். கொல்லப்பட்ட பெண்ணின் தாய்மாமன் கழுத்தை நெரிக்க, பெண்ணின் தம்பியே குழிதோண்டி புதைத்த கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற கௌரவ சாதிக் கொலைகளால் ஒவ்வொரு வருடமும் சுமார் ஆயிரம்பேர் உயிரிழப்பதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், இதில் பாதிக்கு மேல் காதல் சம்பந்தப்பட்ட கௌரவக் கொலைகள் என்றும் அந்த நிறுவனம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி இதுபோன்ற பிரச்சினைகளால் வருடாந்தம் 700 பெண்கள்வரை தற்கொலை செய்து கொள்வதாகவும், இவற்றில் பாதிக்கு மேல் கௌரவத்; தற்கொலைகள் என்றும்;. தலித் இளைஞர்களை காதலித்த குற்றத்துக்காக பெரும்பாலும் பெண்கள்தான் இவ்வாறு தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சாதி கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு போதுமான சட்டங்கள் இந்தியாவில் கொண்டுவரப்படாததும் இதுபோன்ற கொலைகள் அதிகரிப்பதற்கான காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது ஆமைச்சராக இருந்த ப. சிதம்பரம் கௌரவக்கொலைகள் தொடர்பாக தனியாக சட்டம் இயற்றப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், இத்தனை வருடங்களுக்கு மேலாகியும் சட்டம் கொண்டுவரப்படவில்லை.
அதேவேளை இந்தியாவின் வட மாநிலங்களில் இயங்கும் பஞ்சாயத்துகள்; இது போன்ற சாதி கௌரவக்கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன. தமிழகத்திலும்கூட சாதிப் பஞ்சாயத்துகள் சாதி கௌரவக் கொலைகளும் தற்கொலைகளும் நடப்பதற்கு உந்துதலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே 2010ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுவதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
வட இந்தியாவில் 90 சதமான கௌரவக் கொலைகள்; பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இவை பெரும்பாலும்; பஞ்சாயத்துக்களின் தீர்ப்பையொட்டி நடத்தப்பட்டவையென்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2008 ஜனவரி தொடக்கம், 2010 ஜூன் வரைக்குமான காலப்பகுதியில் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 1,971 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தக்காலப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 90 சதவீதமானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தற்கொலைகளில் சாதி கௌரவக் கொலைகளும் அடங்கியிருக்கலாம் எனவும், இது போன்ற கௌரவக் கொலைகளை தற்கொலைகள் என்று மூடிமறைப்பதில் குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு கணிசமான பங்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தர்மபுரியில் இடம்பெற்ற இளவரசனின் மரணத்தின்போது பரபரப்பாக பேசப்பட்ட கௌரவக் கொலை, அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற (லோக்சபா) தேர்தலின்போது அடங்கியது. ஓமலு}ர் கோகுல்ராஜின் கொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த கௌரவக் கொலை சிலரால் மூடிமறைக்கப்பட்டது. தற்போது சங்கரின் படுகொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சாதிவெறியர்களின் கொலை வெறியாட்டம் அகோரமாகவே இருக்கிறது. ஆணின் தலையை துண்டிப்பது, மர்ம உறுப்பை சிதைப்பது, பெண்ணின் கைகளை துண்டிப்பது, எரிப்பது என்று பலரும் அஞ்சும் வகையில் கொல்கின்றனர். இது தங்கள் இன பெண்களை காதலிக்கும் பிற ஜாதி இளைஞர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை என்று கூறுகின்றனர்.
இந்தியாவில் சாதிக் கொடுமையை ஒழித்து, மக்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தவேண்டுமென்று பல தலைவர்கள் குரலெழுப்பி வந்தபோதும் அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. பல வடஇந்திய மாநிலங்களில் சாதிப்பிரச்சினை மிகமோசமான நிலையில் காணப்படுகிறது. இதேவேளை தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சினை, தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கு பெரியார் ஈ.வே.ரா. தலைமையிலான திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அவர் மறைவின்பின் அவர் வழியில் வந்த திராவிடக் கட்சிகள் சுயநலன்களுக்காகவும், சொத்து சேர்ப்பதற்காகவும், ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் சாதி அரசியலை தீவிரமாக முன்னெடுத்துச் செல்கின்றனரே தவிர, அவரது கொள்கைகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.
இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் பிரச்சினை தொடருமோ தெரியவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM