சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்திவர முற்பட்ட இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயது மற்றும் 33 வயதான வியாபாரிகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய குறித்த இரு நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் இரு நபர்களையும் சோதனையிட்டபோது சந்தேக நபர்களின் பயணப் பொதியிலிருந்து  7 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான 14,500 சிகரெட்டுகள் அடங்கிய 72 சிகரெட் பக்கற்றுகள் உட்பட மேலும்  10 பக்கற்றுகளை   கைப்பற்றியுள்ளனர். 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட தோடு சிகரெட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வியாபாரிகளிடமிருந்து 25,000 மற்றும் 10,000 ரூபா அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.