ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெரும்­பான்­மையை நிரூ­பித்து மீண்டும் ஆட்­சி­ய­மைக்க முயன்றால் நான் பத­வி­ வி­ல­குவேன். பதவி விலகி வீதியில் இறங்கி மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட நான் தயா­ரா­க­வுள்ளேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைப்­பா­ளர்கள் கூட்டம் நேற்று நண்­பகல் நடை­பெற்­றது.இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி,

கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற ஆட்­சியில் பெறு­ம­தி­யில்­லாத நிலை­யி­லேயே நான் இருந்தேன். 2015 ஆம் ஆண்டு மஹிந்­தவின் ஆட்­சி­யி­லி­ருந்து எவ்­வாறு அதி­ருப்­தி­யுடன் வில­கி­னேனோ அத­னை­விட அதி­க­மான அதி­ருப்­தி­யு­ட­னேயே தற்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யிக்­கின்றோம்.

தற்­போது புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெரும்­பான்­மையைக் காண்­பித்து ஆட்சி அமைக்க முனைந்தால் எனது பத­வி­யி­லி­ருந்து நான் வில­குவேன். ஏனெனில் தவறு என்று கூறி எந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியே­றி­னோமோ அந்த அர­சாங்­கத்­துடன் மீண்டும் செயற்­ப­டு­வது என்­பது முடி­யாத காரி­ய­மாகும். அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் வீதியில் இறங்கி மஹிந்­த­வுடன் இணைந்து வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்கு நான் தயா­ரா­கவே உள்ளேன்.

எனவே மஹிந்­த­வுடன் இணைந்து கட்­சியை முன்­கொண்டு செல்ல நீங்கள் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். ஒன்­று­சேர்ந்து  பணி­யாற்ற வேண்டும். கடந்த அர­சாங்­கத்தில் நாம் உரிய மதிப்­பின்­றியே நடத்­தப்­பட்­டி­ருக்­கின்றோம். இத­னால்தான் நாம் புதிய அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது என்றும் தெரிவித்தார்.