சிறிசேன பாராளுமன்றத்தை உடன் கூட்டவேண்டும்-உலகின் மூத்த அரசியல் தலைவர்களின் அமைப்பு வேண்டுகோள்

Published By: Rajeeban

01 Nov, 2018 | 10:13 AM
image

இலங்கையில் உருவாகியுள்ள முன்னொருபோதும் இல்லாதநிலை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள உலகின் மூத்த அரசியல் தலைவர்களின் எல்டெர்ஸ் அமைப்பு இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் அரசமைப்பு நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகில் மிக மதிக்கப்படும் மூத்த அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள்,  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கியதே எல்டெர்ஸ் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவின் முன்ளாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இந்த அமைப்பை ஆரம்பித்திருந்தார்.

இலங்கையின் அரசியல் தலைவர்களை சட்டத்தினை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள எல்டெர்ஸ் அமைப்பு மனித உரிமைகள் ஜனநாயகக் கொள்கைகளிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் அரசியல் பதற்றநிலையை அதிகரிக்கும் மேலும் வன்முறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் எல்டெர்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை முன்னொருபோதும் இல்லாத அரசமைப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றது. இதற்கு உடனடியாக அமைதியான வழிமுறைகள் மற்றும் சட்டரீதியில் தீர்வை காணவேண்டும் என நோர்வேயின் முன்னாள் பிரதமரும் எல்டெர்ஸ் அமைப்பின் பதில் தலைவருமான குரொ ஹர்லெம் பிரென்ட்லான்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பல வருட உள்நாட்டு மோதல்கள், மனித உரிமைகளால் பெருந்துயரத்தை அனுபவித்துள்ளது. இதன் காரணமாக அரசியல் காய்நகர்த்தல்கள் ஆபத்தை  சந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவை ஜனநாயகத்தையும் அரசமைப்பு விழுமியங்களையும் மதிப்பதன் மூலம் அனைத்து மக்களினதும் நலனிற்காகவும் செயற்படுமாறு வலியுறுத்துகின்றேன் என  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அதன் காரணமாக  தசாப்தகால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை முன்னெடுத்துள்ள பலவீனமான நல்லிணக்க மற்றும் மீள் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் எனவும் எல்டெர்ஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச தலைவரே அரசமைப்பை மீறினால் அரச ஸ்தாபனங்கள் மீதான நம்பிக்கை இழக்கப்படலாம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59