ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று தற்போது இடம்பெறுகின்றது.

பாராளுமன்ற அமர்வினை உடனடியாக கூட்டுமாறு கோருவதற்காகவே சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறுகின்றது.

ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என  தெரிவிக்கின்றனர் என சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை செவிமடுக்கவேண்டும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பிவைத்திருந்தார்.