காத்தான்குடி பிராதன வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் மௌலவி ஒருவர் பலியாகியுள்ளார். இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மிக வேகமாக ஆரையம்பதியிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடு வீதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பயணித்த இருவரில் ஒருவர் பலத்த காயாங்களுடன் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபின்னர் மரணமானார்.

இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மற்ற நபர் விபத்து நடந்த சமயம் தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நபர் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் மத்ராஸாவின் மௌலவி ஒஸாமா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் முற்றாக சேதமடைந்துள்ளது.

- ஜவ்பர்கான்