ஆப்கானிஸ்தானில் மூத்த இராணுவ அதிகாரிகாளை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கு பரா மாகாணத்தின் ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான நாசர் மெஹ்ரி தெரிவிக்கையில்,

இரண்டு இராணுவ ஹெலிகொப்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து ஹெராத் மாகாணத்திற்கு அருகே சென்றபோது, சீரற்ற வானிலை நிலவியது, இதன் காரணமாகவே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியது."  என தெரிவித்தார்.

ஆனால் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.

எனினும் விபத்து குறித்து விசாரணைகளை அந் நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.