நாட்டில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றம் தொடர்பில் நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து சபாநாயகர் கருஜெயசூரிய சட்டமா அதிபரின் கருத்தை கோரியிருந்தார்

சபாநாயகரின் கடிதத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே சட்டமா அதிபர் நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது  என குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பின் கீழ் சட்டமா அதிபரின் கடப்பாடு என்னவென ஆராய்ந்த பின்னரே இந்த முடிவிற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.