பாப்பரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை குணமடைந்த அதிசயம்

24 Nov, 2015 | 11:09 AM
image

அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு  ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி  பாப்பரசர் பிரான்சிஸ்  தலையில்   முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த  செப்டெம்பர் மாதம் அமெரிக்க  பிலடெல்பியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்து ஊர்வலமாக சென்ற போது குறிப்பிட்ட கியன்னா என்ற சிறுமியின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்திருந்தார்.

இந்நிலையில்  கடந்த ஆகஸ்ட் மாதம் பாப்பரசர் வருவதற்கு முன்பு  மேற்படி குழந்தையின் மூளையை எம்.ஆர்.ஐ.  ஊடுகாட்டும் கருவி பரிசோதனைக்கு உட்படுத்திய போது எடுக்கபட்ட படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த  நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட படங்களில் அந்தக் குழந்தையின் மூளைக் கட்டியின் அளவு கணிசமான அளவில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அந்தக் குழந்தையின் உடல் நலம் ஆரோக்கிய நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்தக் குழந்தையின் தாயான கிறிஸ்டன் மஸ்சியன்தோனியோவும் தந்தையான ஜோயும் தெரிவித்தனர்.

பாப்பரசர் தமது குழந்தையின் தலையில் முத்தமிட்டதாலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

கியன்னாவுக்கு ஏற்பட்டிருந்த மூளைக் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52