லண்டனில் இடம்பெற்ற TechRadar  மொபைல் தெரிவு நுகர்வோர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.தனது புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் சாதாரண நியமங்களை சவாலுக்குட்படுத்தக்கூடிய திறன் போன்றவற்றினூடாக இந்த ஆண்டு நடுவர்களின் கவனத்தை OPPO ஈர்த்திருந்தது. 

அதிகளவு போட்டியாளர்களை கொண்ட சந்தை காணப்பட்ட போதிலும்,இந்த ஆண்டு கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு வர்த்தக நாமமாக OPPO அமைந்திருந்தது.

OPPO  ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ கருத்துத் தெரிவிக்கையில், “OPPO எப்போதும் அதன் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன்,ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Techradar இன் மொபைல் தெரிவு நுகர்வோர் விருதுகள் போன்ற பெருமைக்குரிய கௌரவிப்பை OPPO பெற்றுக் கொண்டுள்ளதனூடாக இந்த ஆண்டு அதிகளவு கவனத்தை ஈர்த்த நாமமாக அமைந்துள்ளது. 

நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு எம்மை ஊக்குவிப்பதாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன” என்றார். இந்த பெருமைக்குரிய விருதினூடாக,சந்தையில் காணப்படும் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமம் எனும் தனது நிலையை மேலும்OPPO உறுதி செய்து கொள்ள முடியும். 

இந்த கௌரவிப்பை பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில்  நிறுவனம் மிகவும் பெருமை கொள்வதுடன்,நவீன தொழில்நுட்பங்களை,புரட்சிகரமான வழிகாட்டல்களுடன் வழங்கும் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.OPPO இன் பெறுமதிகளை இது முழுமையாக பிரதிபலிப்பதுடன்,எதிர்காலத்துக்கு பொருத்தமான ஸ்மார்ட்ஃபோனை வடிவமைப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

எதிர்காலத்தின் புத்தாக்கத்தை நுகர்வோர் தெரிவு செய்கின்றனர் OPPO தனக்கான கௌரவத்தை லண்டனில் பெற்றுக் கொண்டதுடன்,ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் நிறுவனங்களிலிருந்து தெரிவை மேற்கொள்ளும் வாய்ப்பை நுகர்வோர் பெற்றிருந்தனர். 

மதிநுட்பமான எதிர்காலத்துக்குரிய தெரிவை நுகர்வோர்கள் மேற்கொண்டனர். ஐரோப்பாவில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு 3 மாத காலப்பகுதியினுள்,எதிர்காலத்தின் ஸ்மார்ட்ஃபோன்களை வரையறுக்கும் முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றாக OPPO கருதப்படுகிறது. புத்தாக்கமான OPPO, தனது 3D  கமராக்களினூடாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த ஆண்டின் மிகவும் முக்கியமான தொழில்நுட்ப புரட்சியாகவும் அமைந்துள்ளது. 

மொபைல் துறையில் புதிய விதிமுறைகளை ஏற்படுத்த OPPO ஆரம்பித்துள்ளதுடன்,TechRadar மொபைல் தெரிவு நுகர்வோர் போன்ற முன்னணி நாமங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பரிசைப் பற்றி கையடக்க தொலைபேசி துறையின் சிறந்த செயற்பாடுகளை கொண்டாடும் வகையில் மொபைல் தெரிவு நுகர்வோர் விருதுகள் வழங்கப்படுகிறது. 

கையடக்க தொலைபேசி சாதனங்கள் முதல் சேவைகள் வரை கௌரவிக்கும் வகையில் கடந்த 18 வருடங்களாக முன்னெடுக்கப்படுகிறது. 

2018 ஆம் ஆண்டு மொபைல் தெரிவு நுகர்வோர் விருதுகள் என்பது விசேடமானதாக அமைந்துள்ளதுடன், பிரித்தானியாவின் முன்னணி தொழில்நுட்ப இணையத்தளமான TechRadar உடன் கைகோர்த்துள்ளது