அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இன்றைய இலங்கை ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.25 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.