இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்திற்குள்ளான விமானத்தின் ஒரு பகுதிய மீட்டுள்ளதாக மீட்புபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா இராணுவ தளபதி விமானத்தை கண்டுபிடித்துள்ளதை உறுதிசெய்துள்ளார்.

நாங்கள் நிச்சயமாக விமானத்தின் ஒரு பகுதியை  கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றோம் என கடற்படை தளத்திலிருந்து கருத்து வெளியிட்டுள்ள ஹரிஸ் நுகிரகோ கடலிற்கு அடியில் 22 மீற்றர் நீள பொருளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டுள்ள பொருளை சோதனையிடுவதற்காக சுழியோடிகளை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்த இடத்திலிருந்து ஐந்து கடல்மைல் தொலைவிலேயே இந்த பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கடலிற்கு அடியிலிருந்து சமிக்ஞையொன்றை அவதானித்துள்ளனர் என தெரிவித்துள்ள  அதிகாரிகள் அதனை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.