பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி பஸ் சேவையொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவையின் மூலமாக சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கும், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் செல்லலாம்.

இந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணமாக 13 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா) இருவழி கட்டணமாக 23 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த பஸ் சேவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.