(லியோ நிரோஷ தர்ஷன்)

யாரை கொலை செய்­தா­வது போரை முடி என மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்த போதிலும் 2 இலட்சம் மக்­களை பாது­காப்­பாக  மீட்­டெ­டுக்கும் சவாலில் கள­மி­றங்­கி னோம். ஆனால் போர் வெற்­றியை தன­தாக்கிக் கொள்­வ­தற்­காக என்­னையும் மீறி கனிஷ்ட நிலை அதி­கா­ரி­க­ளுக்கு பாது­காப்பு செய­லாளர் கட்­ட­ளை­யிட்டார். இதனால் தான் போர் குற்றப் பிரச்­சி­னை­களும் வெள் ளைக் கொடி விவ­கா­ரமும் ஏற்­பட்­டது என முன்னாள் இரா­ணுவ தள­பதி பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா தெரி­வித்தார்.

வீர­கே­சரி இணையத்தளத்திற்கு வழங்­கிய விஷேட செவ்­வி­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட் டார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் செவ்வி பின்­வ­ரு­மாறு,

இறு­திக்­கட்ட போர் தொடர்பில் பாரா­ளு­ மன்ற உரையில் குற்­றச்­சாட்­டுக்கள் சில­வற் றை முன் வைத்­தீர்கள். உண்­மையில் போரின் இறுதி தரு­ணங்­களில் நடந்­தது என்ன?

இறு­திக்­கட்ட போர் தொடர்பில் நான் குற்­றச்­சாட்­டுக்­களை செய்­ய­வில்லை. மே மாதம் 11 ஆம் திக­தியில் இருந்து மே மாதம் 17 ஆம் திகதி வரையில் நான் நாட்டில் இருக்க வில்லை. இதனை பெரிய ஒரு விட­ய­மாக காண்­பித்து அப்­போ­தைய ஆட்­சி­யா­ளரும் அவ­ரது பாது­காப்பு செய­லா­ளரும் இறு­திக்­கட்ட போரை அவர்கள் முன்­னெ­டுத்­த­தாக வெளிப்­ப­டுத்த முற்­பட்­டனர். ஆனால் ஏப்ரல் 19 ஆம் திக­திக்கு பின்னர் நாங்கள் புது மாத்­த­ளனை கைப்­பற்­றி­யதன் பின்னர் விடு­தலை புலிகள் களப்பு மற்றும் கடல் பகு­திற்குள் ஒன்­றரை கிலோ­மீற்றர் அகலம் மற்றும் 15 கிலோ மீற்றர் வரை நீள­மான நிலப்­ப­ரப்­பிற்குள் சிறைப்­பட்­டனர். இதன் பின்னர் உண்­மையில் அந்த போரை ஜெனரல் தர அதி­கா­ரிகள் நெறிப்­ப­டுத்த வேண்­டிய தேவை காணப்­படவில்லை. சாஜன்ட் மற்றும் கோப் ரல் தரத்­தி­லா­ன­வர்­களே போரை முடி­விற்கு கொண்டு வந்­தனர். நாட்டில் நான் இல்லை என்­ப­தற்­காக ராஜபக் ஷர்­க­ளுக்கு செய்­வ­தற்கு ஒன்றும் இருக்கவில்லை என நான் குறிப்­பிட்டேன்.

இதன் பின்னர் வெள்ளைக் கொடி வழக்கு தொடர்­பாக நான் கூறினேன். நடேசன் மற்றும் புலித்­தேவன் போன்­ற­வர்கள் சர­ண­டைய வந்த போது கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. இவ்­வாறு தான் பரந்­த­ளவில் பேசப்­பட்­டது. ஊடகங்­க­ளிலும் கூறப்­பட்­டது, நானும் கேள்­விப்­பட்டேன். எனவே தான் இது தொடர்பில் உரிய வகையில் விசா­ரணை முன்­னெ­டுக்க  வேண்டும் என நான் கூறு­கின்றேன். ஏனென்றால் சர­ண­டை­ப­வர்­க­ளுக்கு எவ்­வி­த­மான பாதிப்பும் செய்யக் கூடாது என  நான் கட்­ட­ளை­யிட்­டி­ருந்தேன். அவ்­வாறு சர­ண­டைய வரு­ப­வர்­களை பொறுப்­பேற்று பாது­காக்க வேண்டும் என்­பதை நான் தெளிவா­கவே கட்­ட­ளை­யிட்­டி­ருந்தேன். இத­ன­டிப்­ப­டையில் தான் சர­ண­டைந்த 12 ஆயிரம் பேரை பொறுப்­பேற்று பாது­காத்தோம். புலித்­தேவன் மற்றும் நடேசன் ஆகி­யோ­ருக்கு சர­ண­டைய வேண்­டிய தேவை காணப்­பட்­ட­தாக பர­வ­லாக பேசப்­பட்­டது. சர்­வ­தேச ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருடன் இது குறித்து பேசப்­பட்டு பின்னர் அவர்கள் பஷில் ராஜபக் ஷ­வுடன் இவர்­களின் சர­ண­டைவு தொடர்பில் பேசி­யுள்­ளனர். இதற்கு பின்னர் என்ன நடந்­தது என்­பது தொடர்­பிலும் புலி­தேவன் மற்றும் நடேசன் சர­ண­டைய வந்த நிலையில் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் காணப்­பட்­டது. எனவே இது குறித்து கட்­டா­ய­மாக விசா­ரணை செய்­யப்­பட வேண்டும். யாரா­வது தவ­றான கட்­ட­ளையை வழங்­கி­னார்­களா? அவ்­வாறு வழங்­கி­யி­ருந்தால் ஏன் வழங்­கி­னார்கள்? என்­பது குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

போரின் இறுதி ஒரு வார கால பகு­தியில் நீங்கள் நாட்டில் இருக்க வில்லை என்று கூறி­யுள்­ளீர்கள். அவ்­வா­றாயின் இறு­திக்­கட்டப் போரை முன்­னெ­டுப்­பது தொடர்பில்   இரா­ணு­வத்­திற்கு கட்­ட­ளை­யிட்­டது யார்?

மே மாதம் 11 ஆம் திக­தியில் இருந்து மே மாதம் 17 ஆம் திகதி இரவு 9 மணி வரை நான் நாட்டில் இருக்கவில்லை. ஆனால் இரா­ணு­வத்­திற்கு கட்­ட­ளை­யிட்­டது நான் . எனது கட்­ட­ளையின் கீழ் போரை நெறிப்­ப­டுத்­திய அதி­கா­ரிகள் என்­னுடன் சீனா­விற்கு சென்­றி­ருந்­தனர். புலி­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் தொடர்­பான  வரைபு படங்கள் உள்­ளிட்ட தேவை­யான அனைத்து உப­க­ரணங்­க­ளையும் எடுத்து சென்­றி­ருந்தோம். ஒரு நாளைக்கு இரண்டு தட­வைகள் களத்தில் இருந்த தள­ப­தி­க­ளுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டேன். தேவை­யான ஆலோ­ச­னை களை வழங்­கினேன். கொழும்பில் இருந்து எவ்­வாறு போரை நெறிப்­ப­டுத்­தி­னேனோ அதே­போன்று சீனாவில் இருந்தும் நெறிப்­ப­டுத்­தினேன். கொழும்பு - சீனா என்று எனக்கு வேறு­படவில்லை.

விடு­தலைப் புலி­களின்  தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் மே மாதம் 19 ஆம் திகதி வரை உயி­ருடன் இருந்­த­தாக நீங்கள் தெரி­வித்­துள்­ளீர்கள். அதனை எவ்­வாறு உறு­திப்­படக் கூறி­னீர்கள் ?

மே மாதம் 19 ஆம் திகதி வரை போர் இடம்­பெற்­றது. உயி­ருடன் இருந்து கொண்டு அவர் எமக்கு எதி­ரான போரை முன்­னெ­டுத்தார். 19 ஆம் திகதி போர் முடிந்த பின்னர் தான் நந்­திக்­கடல் களப்பில் வடக்கு மூலையில் இருந்து துப்­பாக்கி சூட்டுக் காயங்­க­ளுடன் அவ­ரது உயி­ரற்ற உடல் எமக்கு கிடைத்­தது. அதா­வது 19 ஆம் திகதி பகல் 11 மணி­ய­ளவில் தான்  போர் முடிந்து விட்­டது. பிர­பா­க­ரனின் சடலம் கிடைத்து விட்­டது என அங்­கி­ருந்து எனக்கு தகவல் கிடைத்­தது. ஆகவே பிர­பா­கரன் இறுதி வரை களத்தில் இருந்து போர் செய்­த­மையை என்னால் உறு­திப்­படக் கூற முடியும். 19 ஆம் திகதி 11 மணி­ய­ளவில் தான் பிர­பா­க ரன் களத்தில் உயி­ரி­ழந்தார்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் குடும்பம் மற்றும் அவ­ரது இளைய மகன் உயி­ரி­ழப்பு தொடர்பில் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் காணப்­ப­டு­கின்­றது.....

பிர­பா­க­ரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊட­கங்­க­ளுக்கு பல தட­வைகள் தெ ளிவு­ப­டுத்­தி­யுள்ளேன். இர ண்டு படங்­களை நானும் பார்த்தேன். ஒரு படத்தில் சாரம் ஒன்றை போர்த்திக் கொண்டு பங்­கரில் இருப்­பது போன்று உள்­ளது.  அந்த பங்­கரை இரா­ணு­வத்­தி­னது என்று கூற முடி­யாது. ஏனென்றால் அந்த காலப்­ப­குதியில் விடு­தலைப் புலி­களும் பங்­கரில் தான் இருந்­தனர். பிர­பா­க­ரனின் மகன் கைது செய்­யப்­பட்­டி­ருந்தால் அவ்­வாறு பங்­கரில் இருக்க சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­காது. குறைந்­த­பட்சம் வவு­னி­யாவில் உள்ள முகாம் ஒன்­றிற்­கா­வது கொண்டு வந்­தி­ருப்போம். இரா­ணுவ நட­வ­டிக்­கைகளின் போது முன்­னி­லையில் இருந்து போரி­டு­ப­வர்கள் தான் இவ்­வாறு பங்­கர்­களில் இருப்­பார்கள். எனவே நிலைப்­பாடு யாதெனில் அது விடு­தலைப் புலி­களின் பங்கர். அதில் தான் இளைய மகன் இருந்­துள்ளார். ஏனென்றால் விடு­தலை புலி­களின் தலை­வர்­களும் பங்­கர்­களில் தான் இருந்­தனர். அவர் போர்த்திக் கொண்­டி­ருந்த சாரம் கூட அந்த பகுதி மக்கள் பயன்­ப­டுத்தும் ஒன்று.  அவ்­வா­றான சரங்கள் முகாம்­களில் இல்லை. இரா­ணு­வத்­தி­டமும் இல்லை. எனவே பிஸ்கட் ஒன்றை சாப்­பிட்டு கொண்டு அந்த பங்­கரில் இருக்­கின்­றமை இதி­லி­ருந்து வெளி ப்­ப­டு­கின்­றது. அவர்கள் இறு­தியில் பங்­கர்­களில் தான் இருந்­தனர். அவ­ரது குடும்­பமும் கூட இருந்து இருக்­கலாம். பிர­பா­க­ரனும் இருந்து இருக்­கலாம்.

மற்றப் புகைபடத்தில் துப்­பாக்கி சூடு­பட்டு கீழே கிடந்தார். எனவே எப்­படி சுடப்­பட்டார்? எங்கு வைத்து சுடப்­பட் டார்? என்­பது தொடர்பில் எமக்கு பிரச்­சினை உள்­ளது. உதா­ர­ண­மாக 16 ஆம் திகதி  இரவு நந்­திக்­கடல் களப்பை சுற்றி மூன்று பாது­காப்பு வல­யங்­களை நான் போட்­டி­ருந்தேன். விடுதலை புலிகள் இந்த பாது­காப்பு வலயங்கள் மீது தாக்­குதல் மேற்­கொண்டு முல்­லைத்­தீவு காட்­டுக் குள் செல்­வ­தற்கு முற்­பட்­டனர். முத­லா­வது பாது­காப்பு வலயம் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட போது உயி­ரி­ழந்­த­வர்­களின் சுமார் 75 சட­லங்கள் கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டது. இதன் போது சில சட­லங்­களை எம்மால் எடுக்க முடி­யாமல் போயி­ருக்­கலாம். களப்பில் விழுந்­தி­ருக்­கலாம். சூட்டுக் காயங்­க­ளுடன் சிலரை தூக்­கியும் சென்­றி­ருக்­கலாம். அந்த இடத் தில் பிர­பா­க­ரனின் குடும்­பத்தில் உள்­ள­வர்கள் அனை­வரும் இருந்­தார்கள் என்ற உறு­தி­யான நம்­பிக்கை எனக்­குள்­ளது. பாது­காப்பு வல­யங்­களை உடைத்து கொண்டு பிர­பா­க­ரனின் குடும்­பத்­தி­ன­ருடன் முல்­லைத்­தீவு காட்­டிற்குள் செல்­வ­தற்கே விடு­தலை புலி­களின் போரா­ளிகள் முற்­பட்­டனர். அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் இளைய மகன் துப்­பாக்கி சூட்­டிற்கு இல க்­கா­கியும் இருக்­கலாம். எனவே அந்த புகைப்­ப­டங்கள் இரா­ணுவ முகாம் ஒன்றில் இரா­ணு­வத்தால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக கூற இய­லாது. உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம். அவ்­வா­றான படங்­களை எடுக்­கவும் முடியும் .ஆனால் அந்த படங்கள் உண்மை என்றால் பாது­காப்பு வல­யங்­களை உடைக்க முற்­பட்ட போது இடம்­பெற்ற துப்­பாக்கி பிர­யோ­கத்தில்  உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம். ஏனென்றால் பாது­காப்பு வல­யங்­களை உடைத்துக் கொண்டு முன்­னோக்கி நகர முற்­ப­டு­கையில், அதா­வது 17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகு­தியில் வட திசைக்கு வந்து எமது பாது­காப்பு வல­யங்­களை உடைத்து புது­மாத்­தளன் பக்கம் செல்­வ­தற்கு முற்­பட்­டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்­டனி உட்­பட 200 மேற்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டனர். இதன் போது இடம்­பெற்ற போர் 17 ஆம் திகதி இரவு 2.30 மணி­யி­லி­ருந்து மறுநாள் அதா­வது 18 ஆம் திகதி  பகல் 1 மணி வரை நீடித்­தது. இங்கு தான் 200 பேர் வரை கொல்­லப்­பட்­டனர். பிர­பா­க­ரனும் இந்த இடத்தில் இருந்து தான் போர் நீடித்ததன் கார­ண­மாக அங்­கி­ருந்து வட திசையை நோக்கி செல்ல முற்­பட்­டி­ருப்பார். எனவே அவர்கள் இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம்.

விடு­தலை புலி­களின் வேறு தலை­வர்கள் சர­ண­டை­வது தொடர்பில் அர­சியல் தரப்­பு­க­ளுடன் தொடர்புகொண்டு உங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டதா ?

12 ஆயிரம் பேர் சர­ண­டைந்­தனர்.  அதற்கு முன்னர் சர­ண­டை­வது தொடர்பில் பேசப்­படவில்லை. சர­ண­டை­வது தொடர்பில் எம்­முடன் யாரும் தொடர்­புக்­கொள்­ளவும் இல்லை. போர் நிறுத்தம் கேட்ட போது நாங்கள் வேண்டாம் என்று கூறியும், மஹிந்த ராஜபக் ஷ போர் நிறுத்­தத்தை ஜன­வரி மாதம் 31 ஆம் திகதி மற்றும் பெப்­ர­வரி மாதம் 1 ஆம் திகதி வழங்­கினார். இந்த போர் நிறுத்­தத்தை பயன்­ப­டுத்திக் கொண்டு பிர­பா­கரன் முல்­லைத்­தீவில் எனது பாது­காப்பு வல­யங்கள் மீது தாக்குதல் நடத்­தினார். இதன் போது 5 கிலோ மீற்றர் வரை பின் சென்று ஒரு மாதிரி நிலையை நாங்கள்  தக்க வைத்துக் கொண்டோம். இதனை தவிர சர­ண­டை­வது தொடர்பில் என்­னுடன் யாரும் பேச வில்லை. ஆனால் பஷில் ராஜபக் ஷ­வுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக தகவல் உள்­ளது. எனவே இத­னுடன் மேலும் தொடர்­பு­பட்ட சர்­வ­தேச தரப்­புகள் ஒரு கட்­டத்தில் வெளியில் வந்து கூறு­வார்கள்.

விடு­தலை புலி­க­ளுக்கு பணம் கொடுக்­கப்­பட்­ட­தாக கூறி­யுள்­ளீர்கள். இந்த பணம் எப்­போது வழங்­கப்­பட்­டது?

2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போதே விடு­தலை புலி­க­ளுக்கு பணம் கொடுக்­கப்­பட்­டது. தமிழ் மக்­களை வாக்­க­ளிக்க விடாது பிர­பா­கரன் தடுத்தார். ஒருவர் மாத்­தி­ரமே வாக்­க­ளித்தார். அவ­ரது கைகளும் வெட்­டப்­பட்­டது. வாக்­க­ளிப்­பதை தடுப்­ப­தற்­கா­கவே பிர­பா­கர­னுக்கு இலஞ்சம் கொடுக்­கப்­பட்­டது. இதில் எவ்­வி­த­மான சந­்தே­கமும் இல்லை. பஷில் ராஜபக் ஷ விடு­தலை புலி­க­ளுக்கு பணம் வழங்­கி­யமை தொடர்பில் எனக்கு கூறினார். 200 மில்­லியன் ரூபா வழங்­கி­யுள்­ளனர்.

இந்த பணம் எதற்­காக வழங்­கப்­பட்­டது?

தமிழ் மக்­களை வாக்­க­ளிக்க விடாது தடுப்­ப­தற்கு கைமா­றாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என பிர­பா­க­ர­னிடம் இவர்கள் கேட்­டுள்­ளனர். கடற் புலி­க­ளுக்கு தேவை­யான பட­குகள் மலேசி­யாவில் உள்­ளன. அதனை பெற்றுக் கொள்ள 2 மில்­லியன் டொலர்கள் தேவைப்படு­கின்­றது. அதற்கு தேவையான பணத்தை தரு­மாறு பிர­பா­கரன் கேட்­டுள்ளார். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே பணம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இல்லை என கூறி­னாலும் அவற்றை நான் பதிவு செய்ய வில்லை. ஆனால் அப்­போ­தைய இரா­ணுவ தள­பதி என்ற வகையில் எனக்கு நினைவில் உள்­ளது.

போரின் இறுதி தரு­ணத்தில் அர­சியல் ரீதி­யி­லான தலை­யீ­டுகள் மற்றும் அழுத்­தங்கள் எதுவும்  உங்­க­ளுக்கு காணப்­பட்­டதா?

போரின் கௌர­வத்தை பெற்­றுக்­கொள்ளும் பேரா­சையில் என்னை ஓரங்­கட்ட முற்­பட்­டனர். ஜகத் ஜய­சூ­ரிய வவு­னி­யா­விற்கு பொறுப்­பாக இருந்தார். இவ­ ருக்கு பொறுப்­ப­ளித்து விட்டு என்னை வில­கி­யி­ருக்­கு­மாறு பாது­காப்பு செய­லாளர் கூறினார். நல்லவேளை, நான் விலக வில்லை. ஏனென்றால் அந்த காலப்­ப­கு­தியில் புதுக்­கு­டி­யி­ருப்பை அண்­மித்த பகு­தி­களில் பிர­பா­கரன் கடும் தொடர் தாக்­கு­தல்­களை இரா­ணுவ நிலைகள் மீது தொடுத்தார். நான் இருந்­தி­ருக்கா விட்டால் போர் தலை­கீ­ழாகி விட்­டி­ருக்கும். ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு அவ்­வா­றான தாக்­கு­தல்­களை எதிர்­கொள்­ளவோ பதில் தாக்­கு­த­லுக்கு திட்­ட­மி­டவோ முடி­யாது. இதனை தவிர எனக்கு வேறு அழுத்­தங்கள் கொடுக்க வர­வில்லை. ஆனால் பாது­காப்பு செய­லாளர் என்­னூடாக இல்­லாமல் கனிஷ்ட நிலை அதி­கா­ரி­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருந்தார். சவேந்­திர சில்வா, கமல் குண­ரட்ன ஆகி­யோ­ருடன் பாது­காப்பு செய­லாளர்  தொலை­பே­சியில் தொடர்­புக்­கொண்­டி­ருந்தார். இவ்­வாறு உரை­யா­டி­ய­மை­யினால் தான் வெள்ளைக்­கொடி போன்ற பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன என நான் நினைக்­கின்றேன். பாது­காப்பு செய­லாளர் என் ஊடாக தான் கனிஷ்ட அதி­கா­ரி­க­ளுடன் பேசி­யி­ருக்க வேண்டும். அவர் செய்­தது தவறு .

ஆனால் மஹிந்த ராஜபக் ஷ 2008 ஆம் ஆண்டில் இருந்து போரை சீக்­கிரம் முடித்து தரு­மாறு எனக்கு கூறிக்­கொண்­டி­ருந்தார். அவ­ச­ர­மாக போரை முடி­விற்கு கொண்டு வர முடி­யாது. பொது மக்கள் உள்ளே இருக்­கின்­றனர். எனவே நிதா­ன­மாக தான் போரை முன்­னெ­டுக்க வேண்டும் என அப்­போது நான் கூறினேன். யார் உயி­ரி­ழந்­தாலும் பர­வா­யில்லை, எவனை கொலை செய்­தா­வது போரை முடி­யுங்கள் என மஹிந்த ராஜபக் ஷ கூறினார்.

பொது­மக்கள் பாதிப்­புகள் தொடர்பில் உங்­களால் கூற முடி­யுமா?

பொது மக்கள் மீதான பாதிப்­புகள் தொடர்பில் கூறப்­ப­டு­வது போன்று பல்­லா­யிரம் பேர் உயி­ரி­ழக்க வில்லை. அவ்­வாறு உயி­ரி­ழந்­தி­ருந்தால் அங்கு தோண்டும் போது எலும்­புகள் கிடைத்­தி­ருக்கும். ஆனால் புது­மாத்­தளன் பகு­தியில் விடு­தலை புலி உறுப்­பி­னர்­களை அவர்­க­ளது புலி கொடி­யுடன் வானத்­திற்கு துப்­பாக்கி பிர­யோகம் செய்து புதைப்­பதை கண்டோம். 900 பேர் வரை புதைப்­பதை மேலி­ருந்து யு வீவில் பார்த்துக் கொண்­டி­ருந்தோம். இதனை தவிர வேறு உயி­ரி­ழந்­த­வர்­களை புதைப்­பதை நாங்கள் காண வில்லை. அதே போன்று போரின் இறுதி ஒன்­றரை மாதத்­தி­லி­ருந்து சர்­வ­தேச செஞ்­சி­லுவை சங்கம் காய­ம­டைந்­த­வர்­களை அங்­கி­ருந்து வெளியில் கொண்டு வர அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. காய­ம­டைந்­த­வர்­களை இவ்­வாறு வெளியில் கொண்டு வந்து புல்­மோட்­டையில் வைத்து கடற்­ப­டை­யிடம் ஒப்­ப­டைத்­தனர். இவ்­வாறு 350 பேர் வரை தான் கொண்டு வந்­தனர். கூறு­வது போன்று உயி­ரி­ழந்­தி­ருந்தால் படுகாய­ம­டைந்­த­வர்கள் 2 அல்­லது 3 ஆயிரம் வரையில் இருந்­தி­ருக்க வேண்டும். எனவே பாரிய இழப்பு என்­பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விட­ய­மல்ல. ஆனால் போர் இடம்­பெற்ற பகு­தியில் வாழ்ந்த மக்­க­ளுக்கு சிறு காயங்கள் ஏற்­ப­டு­வதை தடுக்க முடி­யாது. மிகவும் கவ­ன­மாக போரை முன்­னெ­டுத்­த­மை­யினால் தான் இறுதித் தரு­ணத்தில் 2000 இரா­ணுவம் உயி­ரி­ழந்­தது. 2008 ஆம் ஆண்டில் முழு வரு­டத்­திலும் 2000 இரா­ணு­வமே உயி­ரி­ழந்­தது. 2009 ஆம் ஆண்டு 4 மாதங்­களில் 2000 பேர் உயி­ரி­ழந்­தனர். கன­ரக ஆயு­தங்கள் இதன் போது பயன்­ப­டுத்த வில்லை. நீண்ட தூரம் தாக்கக் கூடிய தன்­னி­யக்க துப்­பாக்­கிகள் பயன்­ப­டுத்த வில்லை. கவ­ன­மாக போரை முன்­னெ­டுத்­த­மை­யினால் எமக்கு இழப்­புகள் அதி­க­மா­னது.

ஆனால் இறுதி போரில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இலங்கை இரா­ணு­வத்­திற்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் உள்­ளது....

நாங்கள் பயன்­ப­டுத்த வில்லை. அவ ர்கள் பயன்­ப­டுத்­தி­னார்கள். சிறு ரக மோட்டார் குண்­டு­களை விடு­தலை புலி கள் பயன்­ப­டுத்­தி­னார்கள். இரா­ணு­வத்­திற்கு பாதிப்­புகள் ஏற்­பட்­டன. சிகிச்­சை கள் அளித்தோம். எனது இரா­ணுவம் அவ்­வா­றான ஆயு­தங்­களை பயன்­ப­டுத்த வில்லை. அவை பெற்றுக் கொள்­வதும் எளி­தான விட­ய­மல்ல. எந்த நாடு­களும் அவ்­வா­றான ஆயு­தங்­களை விற்­பனை செய்­வ­தில்லை.

போரின் பின்­னரும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் வாழ்வில் எவ்­வி­த­மான முன்­னேற்­றமும் இல்லை.....

நல்­லாட்சி அர­சாங்கம் அவர்­களை கைவிட வில்லை. மிகவும் நட்பு ரீதி­யாக  தமிழ் அர­சியல் தலை­மைத்­து­வங்­க­ளுடன் அர­சாங்கம் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றது. முத­ல­மைச்­ச­ரு­டனும் கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கின்­றது. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இதனை யாரும் செய்ய வில்லை. வடக்கில் வீதி­களை அமைத்­தார்கள். அதில் தான் கொள்­ளை­ய­டிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு செயற்­பாட்­டார்­களே தவிர மக்­களின் பிரச்­ச­ினை­களை தீர்ப்­ப­தற்கு  கவனம் செலுத்த வில்லை. பாது­காப்பு செய­லாளர் உட்­பட சூழ இருந்­த­வர்­களும் அதற்கு ஆலோ­சனை வழங்க வில்லை. ஆனால் நான் போர் முடி­வ­டைந்த பின்னர் மீள் குடி­யேற்றம் மற்றும் அடிப்­படை தேவை­கைள பூர்த்தி செய்­வது தொடர்பில் திட்டம் ஒன்றை கைய­ளித்தேன். அதனை பொருட்­ப­டுத்த வில்லை.

விடு­தலை புலி­களின் சொத்­துக்­க­ளுக்கு என்ன நடந்­தது?

சிங்­கள ஊட­கங்கள் பல புலி­களின் தங்­கங்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தின. ஆனால் அவை குறித்து இன்றும் விசா­ர­ணைகள் ஏன் முன்­னெ­டுக்க வில்லை என எனக்கு விளங்கவில்லை. அர­சாங்கம் புலி­களின் சொத்­துக்கள் மற்றும் தங்கம் தொடர்பில் விசா­ரணை நடத்த வேண்டும் என நான் நினைக்­கின்றேன். நான் இரா­ணுவ தள­ப­தி­யாக  இருந்த காலப்­ப­கு­தி யில் 220 கிலோ தங்கம் கிடைத்­தது. ஆனால் 110 கிலோ தங்கம் தான் கிடைத்­த­தாக நான் சிறையில் இருந்த போது பஷில் ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். சரி­யாக 50 வீதத்தை எடுத்து விட்­டனர். அதன் பின்­னரும் பல இடங்­களில் தங் கம் கிடைத்­தது. புலி­களின் தங்கம் கொள் ளையடிக்கப்பட்டுள்ளது. அப்போது அதி காரத்தில். இருந்தவர்கள் அதற்கு பொறு ப்புக் கூற வேண்டும். விேசடமாக பாது காப்பு செயலாளர் அறிந்திருக்க வேண் டும்.

இறுதிக்கட்டப் போர் தொடர்பில் இராணு வத்திற்கு எதிராக சர்வதேச குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன ?

சர்வதேசத்தில் இடம்பெயர்ந்தவர்களில் சிலர் பயங்கரவாதத்திற்கு உதவி செய் தனர். இவர்கள் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பெரிதாக பேசு கின்றனர். ஆனால் இராணுவம் சர்வ தேச மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு மதிப்ப ளித்து போரை முன்னெடுத்தது. மனித உரிமைகளை மீறுவதற்கு நான் திட்டங் கள் அமைக்க வில்லை. இராணுவ நடவ டிக்கைகளின் போது கண்காணிப்பு செய் தேன், வழி நடத்தினேன்.  போர் வியூகங் களை வகுத்தேன் இவை அனைத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத் தியே முன்னெடுத்தேன். ஆனால் விடு தலை புலிகள் மக்களை கவசமாக பயன் படுத்தினார்கள். அதனை புலிகள் பொறு ப்பேற்க வேண்டும். எவ்வாறாயினும் விடு தலை புலிகளிடம் சிறைப்பட்டிருந்த 2 இலட்சம் மக்களை கடும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்டெடுத்தோம். இந்த கட்டத் தில் இராணுவ அதிகாரிகள் சாதாரண சிப்பாய்கள் கூடுதலாக உயிரிழந்தனர். ஆனால் மக்களை பாதுகாப்பாக மீட்டெ டுக்க முன்னுரிமை வழங்கி செயற்பட் டோம். எவ்வாறாயினும் யாராவது தவறு செய்திருந்தால் அதனை தனிப்பட்ட ரீதி யில் பொறுப்பேற்க வேண்டும். மொத்த இராணுவத்தின் மீதும் குற்றம் சுமத்த முடியாது. ஆட்சியாளரும் அதனை சூழ இருந்தவர்களும் கொள்ளையடித்து பல் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் இராணுவத்திலும் ஓரிருவர் இருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை.