யாழ்.குடத்தனை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ்  நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருந்தார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையிலேயே நேற்று சந்தேக நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.