இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பய்னே தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலை தொடர்பாக மரைஸ் பய்னே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மரைஸ் பய்னேயின் அறிக்கையில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை அவுஸ்திரேலியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.