சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

Published By: R. Kalaichelvan

31 Oct, 2018 | 11:03 AM
image

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டபகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து 17வயது சிறுவன்  பரிதாபகரமான நிலையில் நேற்று மாலை 05.30மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த ஆற்றின் பகுதியில் விவசாய தோட்டத்திற்கு வரிச்சிவகைகளை வெட்டுவதற்காக சென்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆற்று பகுதிக்கு சென்ற சிறுவனை காணவில்லை என தோட்ட பொதுமக்களும்,உறவினர்களும் நீண்ட நேரமாக காணவில்லை என தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் நீண்ட லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள ஆற்றில் சடலமாக கிடந்ததை இனங்கண்ட பொதுமக்கள் உடனடியாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த பொகவந்தலாவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலமாக மீட்கபட்ட  சிறுவன் 17 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,குறித்த சிறுவனின் தாய் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும்,தனது தந்தையின் பாராமரிப்பில் இருந்து வந்துள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு குறித்த சம்பவம் கொலையா அல்லது தவறிவிழுந்ததில் குறித்த சிறுவன் உயிர் இழந்தாரா என்றசந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ள நிலையில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம்

இன்று நாவலபிட்டி மாவட்டவைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணகளை  பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10