(நா.தினுஷா, இரோஷா வேலு) 

குறுகிய கால பிரதமர், குறுகிய கால அமைச்சரவை என கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரை நினைத்து நாட்டு மக்கள் மாத்திரமல்ல சர்வதேசமே நகைக்கின்றது என பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் யுத்தத்தை வெற்றிக்கொண்ட மக்கள் விரும்பும் தலைவர் என கூறிக்கொள்பவர் அதனை நிரூபிக்க அஞ்சுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசிய முன்னனியினர் இன்று அலரிமாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.