பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமலே தெருவில் இருந்து போராடியிருக்கின்றேன். ஆனால் சுற்றிவர நடக்கும், பதவிக்கும், பணத்திற்கும் விலை போகும் குதிரை பேரங்களால் மனசு சலிக்கின்றது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

"என் வரலாற்றையும், என்னையும் மறந்தோருக்கும் நான் யாரென இப்போது தெரிந்திருக்கும். 

ஆனால் அரசியல் எனக்கு சலிக்கின்றது.விடைபெற அழைக்கிறது" என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது சமூகவலைத்தள நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பதிவுக்கு ஆதரவாக பலர் பேஸ்புக்கில் பதிவுகள் பதிவேற்றம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.