(நா.தினுஷா, இரோஷா வேலு)

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி, வரிசலுகை உள்ளிட்ட இலங்கையின் அனைத்து வெளிநாட்டு உறவுகளையும் துண்டிக்கப்போவதாக சர்வதேச தூதரகங்கள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னனியின் அரச எதிர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அனைத்து விதத்திலும் நாட்டை வலுப்படுத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்தவே பிரதான இரு கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்தன. ஆனல் நல்லாட்சி கொள்கைகளை மீறி நாட்டின் யாப்புக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய துரோகம் இழைத்து விட்டார். 

இதன்மூலம் மக்களாட்சியை நலைநாட்டுவதற்கும் அரசாங்கத்தை தூய்மையாக்குவதற்கும் ஜனாதிபதி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.