யால தேசிய பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வறட்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த பூங்கா ஒரு மாத காலம் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பூங்காவை எதிர்வரும் வியாழக்கிழமை திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போதைய காலநிலையை கருத்திற்கொண்டு இன்றைய தினம் திறந்துள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் எம்.பி.சி சூரிய பண்டார தெரிவித்தார்.