இத்தாலியை தாக்கிய புயல் மற்றும் மழை காரணமாக இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று தாக்கிய கடுமையான புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருதுடன் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் புயலினால் சாய்ந்துள்ளது.

இந் நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் காரிலிருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். அத்துடன் சவோனோ என்ற பகுதியில் பறந்து வந்த மரக்கட்டை தாக்கியதில் ஒரு மூதாட்டி உயிரிழந்துடன் மேலும் இருவர் பலியாகினர். 

இதனால் இதுவரை புயல், மழையினால் உண்டான வெள்ளம் போன்றவற்றில் சிக்குண்டு 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் வெனிஸ் நகரில் வீடுகளும், வீதிகளிளும் வெள்ள நீரில் மூழாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.