புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது தேசிய மாநாட்டிலேயே பிரதமர்  இதனைத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இத்தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டுள்ளனர்.