முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 603 ஆவது நாளான 30.10.18 அன்று கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கொட்டகை முன்பாக இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்போது உலக நாடுகளே எங்களுக்காக குரல் கொடுக்கமாட்டீர்களா.

எமது கண்ணீருக்கு முடிவே இல்லையா நல்லாட்சி அரசே!

நல்லாட்சி அரசே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?

இனியும் காலம் தாழ்த்தாது எமக்கான நீதியை தா நல்லாட்சி அரசே!

தமிழனாய் பிறந்தது குற்றமா?அல்லது நாம் இன்னும் உயிருடன் இருப்பதுகுற்றமா?

தமிழருக்கான நீதி எப்போது கிடைக்கும்!

என்ற கோசங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.