சிங்கள மொழி மூலமான அரசியலமைப்பிற்கு அமைய எதேர்ச்சையாக பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.தகவல் ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

“நீதி மன்றின் தீர்ப்புக்கள் யாவும் சிங்கள மொழியில் உள்ள அரசியலமைப்பிற்கமையவே அமைகின்றன. ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலத்தில் உள்ள அரசியலமைப்பை படித்து விட்டு அதற்கமையவே செயற்படுகிறார்.

அதன் படியே பிரதமரின் பதவி நீக்கம் மற்றும் புதிய பிரதமர் தெரிவு என்பன அரசியலமைப்பிற்கு முரணாகவே அமைந்துள்ளன என  வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின் போது ரணில் தெரிவித்துள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்க ஆங்கில அரசியலமைப்பை விடுத்து சிங்கள அரசியலமைப்பை படித்து தெளிவு பெற வேண்டும்.” என தெரிவித்தார்.