கொழும்பு லிப்படன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்”  எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நண்பகல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.