புவி வெப்பமயமாதலின் அளவினைக் கண்காணிக்க ஜப்பான் கோசாட் -2 என பெயரிடப்பட்ட செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.

புவி வெப்பமயமாதலை குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக ஜப்பான் இந்தக் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

ஜப்பானின் டனெகாஷிமா விண்வெளி நிலையத்தில் வைத்து நேற்று நண்பகல் 1.08-க்கும் எச் 2ஏ ரொக்கெட் மூலமாக இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ரொக்கெட் புறப்பட்டுச் சென்ற 16 நிமிடங்களில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் புவி வெப்ப மயமாதலை ஏற்படுத்தும் வாயுவின் அளவை கணக்கீடு செய்வதுடன், மீத்தேன், ஈத்தேன் மற்றும் சில வாயுக்களின் அளவு குறித்தும் கோசாட்-2 செயற்கை கோள் தகவல் அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.