(க.கிஷாந்தன்)

 தாய் ஒருவர் தனது இரண்டரை மாத ஆண் சிசுவுக்கு கொடுத்த பால் சிசுவின் மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதனால்  சிசு மூச்சு திணறி உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை சவூத் தோட்டத்தில்  இடம்பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸ் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி வீ. சுந்தர் ராஜ் தெரிவித்தார்.

வட்டகொடை சவூத் தோட்டத்தில் வசிக்கும் சசிக்குமார் ரிதிக்சன் என்ற ஆன் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வின் தாய். வீ. முருகாந்தினி இவர் உயிரிழந்த குறித்த சிசுவை 7 மாதத்தில் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.