(நா.தனுஜா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பிலான மீயுயர் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் என்பது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதனால், பாராளுமன்றம் கூட்டப்படுவதுடன் அது பொதுமக்களுக்கு வெளிப்படைத்தன்மையான விதத்தில் செயற்பட்டு, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியால் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை அரசியலமைப்புக்கு ஏற்புடையது எனவும், முரணானது எனவும் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசியலமைப்பு தொடர்பான விவகாரங்களில் செயற்படும் உச்சபட்ச அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு என்பதை அனைத்துத் தரப்பினருக்கும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.