(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் சீன அரசாங்கம் தலையிடாது என சீன தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அவதானித்து வருகின்ற நிலையில், சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து;ளளார். 

அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் அமைச்சரவையிலுள்ள அமைச்சரொருவருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியளாலர்கள் கேள்வி எழுப்பிய போது, படுகொலை திட்டம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் என்னிடம் தெரிவித்த விடயங்கள் குறித்து நான் ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்துவிட்டேன். இந்த விடயத்தில் இந்தியா இலங்கை என இரு தரப்பு கருத்து என்று எதுவும் இல்லை.