( இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தனது சுயநலத்துக்கு ஏற்பட்ட பாராளுமன்றத்தை பயன்படுத்த அதுவொன்றும் குடும்ப சொத்தல்ல என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதமராக  மஹிந்த ராஜபக்ஷ  அரசியலமைப்பிற்கு முரணாக நியமிக்கப்பட்டமை சர்வதேசம் வரை நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.  ஆகவே பாராளுமன்றத்தினை தமது  சுய தேவைகளுக்காக பயன்படுத்தாமல்  மக்களின் விருப்பத்திற்கு இணங்க   செயற்படுத்த வேண்டும். 

எனவே தற்போதைய அரசியல் நெருக்கடியினை சீர்செய்ய பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்ட வேண்டும். அதுவரை ரணில் விக்ரமசிங்கவே  இந்நாட்டின் பிரதமர் எனவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  2015 ஆம் ஆண்டு   அரசியலமைப்பிற்கு முரணாக மேற்கொண்ட தீர்மானத்தினையே இன்றும் செய்துள்ளார். இவ்விடயத்தில் ஆச்சரியப்பட வேண்டிய தேவை கிடையாது.  தங்களின்  அரசியல் தேவைகளுக்காக அரசியலமைப்பு திரிபுப்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் பாரர்ளுமன்ற உறுப்பினர் நிலந்த ஜயதிஸ்ஷ தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.