மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாஓயா - தம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரக்குற்றிகளை கடத்த முற்றபட்ட இருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாஓயா- தம்பிட்டிய பகுதியில் கடந்த சில நாட்களாக சோளன் பொதிகள் கொண்டுவரும் போர்வையில் மரக் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைசெய்யப்பட்டவர்களிடமிருந்து 13 தேக்கு மரக்குற்றிகளையும், மரக் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்ட பொலிஸார், சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.