யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசங்களை புரிந்ததுடன் ஒரு வீட்டில் கணவன்-மனைவி நள்ளிரவு வேளையில் தாக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ம.ம.சித்திரவடிவேல் 56 வயது அவரது மனைவி சி.ஜெயந்தி 43 வயது ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை மற்றொரு வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு கணவனைக் வாளால் வெட்டி கொலை செய்துள்ளது. மனைவி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் படுகாயமடைந்த மனைவியான நிர்மலாதேவி பருத்தித்துறை ஆதர வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 66 வயதுடைய ஒ.ஜெயசிறி எனவும்  படுகாயமடைந்தவர் 54 வயதுடை ஜெ.நிர்மலாதேவி எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது, 

இவ்வாறு பல வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு பலரை மிரட்டி சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.