முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் இவ்வாறு பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, 1,008 பாதுகாப்பு ஊழியர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 10 ஊழியர்களாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.