புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

 

தமிழ்  முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மஹிந்த, புதிய அரசாங் கத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிங்கள அரசாங்கத்தை அமைப்பதற்கு நான் விரும்பவில்லை. இதனால் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை முன்னணியின் பிரதி தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரத்துடனும் புதிய பிரதமர் தொலைபேசியில் கலந்துரையாடி யுள்ளார். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கு மாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டு  தமது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாகவும் ஆதரவுக்கான கோரிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அதியுயர்பீடக் கூட்டம் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது தற்போதைய அரசியல் நிலைவரம்தொடர்பில் மனோ கணேசன் விளக்கிக்கூறியுள் ளதுடன் எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக் கப்படுகின்றது.