ஆஸியை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம் (Highlights)

Published By: MD.Lucias

19 Mar, 2016 | 11:40 AM
image

6ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் அவ்வணியின் வெற்றி தொடர்கின்றது. 

குழு இரண்டுக்கான போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 8விக்கெட்டுக்களை இழந்து 142ஓட்டங்களைப் பெற்றது. 

அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குப்டில் 27 பந்துகளில் 4ஆறு ஓட்;டங்கள் உள்ளடங்கலாக 39ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றார். 

அணித்தலைவர் வில்லியம்ஸன்(24), எலியட்(27) கணிசமான ஓட்டங்களைப் பெற்றனர்.

ஆஸி.பந்து வீச்சில் ஜேம்ஸ் ப்பாலுக்நனர் கிளன் மக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பெற்றினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் ஹவாஜா(38), மெக்ஸ்வெல்(22), மிச்சல் மார்ஷ்(24), வொட்சன்(13) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்கத்துடன் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் 9விக்கெட்டுக்களை இழந்து 134ஓட்டங்களையே அவுஸ்திரேலியாவால் பெற்றுக் கொள்ளமுடிந்தது. 

மூன்றுவிக் கெட்டுக்களைக் கைப்பற்றிய நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிசெய்த மிச்சல் மெக்கிளரன் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார். 

இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து இப்போட்டியிலும் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35