சர்வதேசத்துடனும், இந்தியவுடனுட் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், 

“ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முடிவெடுப்போம்.

கூட்டமைப்பின் ஆதரவு என்பது எமது கோரிக்கைகளை ஏற்று அதற்கான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் தலைமைத்துவத்தினைப் பொறுத்தே அமையும்.

எனவே இவ்விடயம் தொடர்பாக நாம் சர்வதேச சமூகத்துடனும், இந்தியாவுடனும் கலந்துரையாடியே இறுதி முடிவினை எடுக்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.