இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த மோதலில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் போது கூரியு ஆயுதங்களால் தாக்கப்பட்டே கொலைச் சம்பவம்  இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பின்னணியில் அரசியல் இருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.