விந்தணுக்களை பாதிக்கும் மடிக்கணனி

23 Nov, 2015 | 06:04 PM
image

இன்றைய காலத்தில் மாணவர்கள் உட்பட அனைவரும் எல்லாவற்றையும் மடிக்கணனியிலேயே செய்து முடித்துவிடுகிறார்கள். அவசியமோ, இல்லையோ மடிக்கணனி வைத்திருப்பதே வழக்கமாகி வருகிறது. 

மடியில் வைத்து மடிக்கணனி உபயோகிக்கிறவர்களின் விந்தணுக்கள் பாதிக்கப்பட்டு குழந்தை பாக்கியத்தை தடுத்துவிடும் என அமெரிக்க உளவியல் நிபுணர் ஸ்டீவன் பிங்கர் எச்சரித்துள்ளார்.

மடிக்கணனியோடு ஒரு மணி நேரம் செலவழிக்கும் போது அதில் உற்பத்தியாகும் வெப்பம் இடுப்பை தாக்கி, விரைகளின் வெப்பநிலையை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக்கிவிடும். அது மிக மோசமாக விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம் என ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயோர்க் அறிக்கை கூறுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right