கலாபவன் மணி பிரேத பரிசோதனையில் பூச்சிக்கொல்லி, எத்தனோல், மெத்தனோல்  இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்ததேகம் வெளியிட்டுள்ளனர்.

 பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் கொச்சியில் மரணம் அடைந்தார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தம்பி ராமகிருஷ்ணன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந் நிலையில் மரணம் தொடர்பாக கலாபவன் மணியின் உதவியாளர்கள் முருகன், விபின், அருண் ஆகியோர் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கலாபவன் மணியுடன் மது அருந்திய நடிகர் ஒருவர் சாராயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான தகவல்கள் உலா வந்தன. 

அதன் பேரில் அந்த சாமு என்ற நடிகரும் பொலிஸ் விசாரணையில் உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் கலாபவன் மணியின் பிரேத பரிசோதனை அறிக்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. 

அதில் பூச்சி மருந்து கலந்து மது குடித்திருப்பதும் உறுதியாகியுள்ளது. குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து மெத்தனோல், எத்தனோல் ஆகியவை மதுவோடு கலந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே மதுவுடன்  பூச்சி மருந்து கலந்து கொடுத்து கலாபவன் மணி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. 

எனவே இதனால் கலாபவன் மணி மரணம் தொடர்பாக பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்யலாமா என்பது குறித்தும் தீவிரவ ஆலோசனை நடத்தி வருகின்றனர்.