இந்தியா, உத்திரபிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரது கணவரும் மாமியாரும் மிகப்பெரிய சந்ததேகப் பேர்வழிகள். எப்பொழுதும் அவர்கள் அந்த பெண்ணை துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆந்த பெண்ணின் கணவன் நீ கற்புக்கரசி என்பதை நிரூபிக்க நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றும்,  அப்படி செய்தால், நீ ஒழுக்கமானவள் என்பதை நம்புகிறேன் என கூறி அந்த பெண்ணின் கையை நெருப்பில் வைத்து கொடுமைபடுத்தியுள்ளான். 

நீண்ட நேரம் நெருப்பில் கை வைத்திருந்தால் தான் நீ ஒழுக்கமானவள் என நம்ப முடியும் எனவும் கூறியுள்ளான். அவ்வாறே நெருப்பில் கையை வைத்த அந்த பெண் வலி தாங்கமுடியாமல் அலறியுள்ளார். அருகிலிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி பொலிஸ் நிலையத்தில் கூறவே,  பொலிசார் அந்த பெண்ணின் கணவன் மற்றும் மாமியாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.