சீன ஜனாதிபதி புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியானது இலங்கைக்கான சீன தூதுவர் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் இன்று விஜேராமயில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.